Skip to main content

ஆ கர்த்தாவே! உம் கிரியை காணும்போது சொல்லொண்ணா ஆச்சரியமடைந்தேன்


ஆ கர்த்தாவே! உம் கிரியை காணும்போது
சொல்லொண்ணா ஆச்சரியமடைந்தேன்
விண்மீன்களும் இடி முழக்கங்களும்
உம் வல்லமையை காட்டுகின்றதே
என் ஆத்துமா பாடும் இரட்சகா தேவா
நீர் எத்தனை பெரியவர்!

சோலை, வனம், பூங்கா வழி செல்கையில்
பைங்கிளிகளின் பாடல் கேட்கையில்
மலையுச்சியின் மேல் நின்று கீழ் நோக்குகையில்
மென் காற்றருவியால் மகிழ்ந்திருக்கையில் - என் ஆத்துமா

பின்னும் பிதா தன் சுதனைக் குருசில்
தந்த விந்தை விளங்கவில்லை
என் பாவம் போக்கவே அவர் மரத்தில்
ரத்தம் சிந்தி ஜீவன் விட்டார் அந்தோ - என் ஆத்துமா

ஒவ்வொரு நாளும் உன் கிருபையால்
உமது ஞானம் வியந்து மகிழுவேன்
உமது கிருபையால் என் பாவம் நீங்க
என் விண்ணப்பம் உம் கரத்தில் வைத்தேன் - என் ஆத்துமா

ஆர்ப்பரிப் போடவர் திரும்ப வந்து
விண் வீட்டில் சேர்க்கையில் மா ஆனந்தம்
அப்போ முன் வணங்கிப் பணிந்து நீரே
ஆ! எத்தனைப் பெரியவர் என்பேன் - என் ஆத்துமா