Skip to main content

ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி உயிர்ப்பிக்க வேண்டும் எம்மில் தேவா


ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
உயிர்ப்பிக்க வேண்டும் எம்மில் தேவா
முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை
பின்மாரியாக இன்று பொழிந்திடுமே - (2)
எண்ணெய் அபிஷேகமே என் தலையை நனைக்க
ஆவியில் நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும்
நீச்சல் ஆழம் மூழ்கியே நேசர் அன்பில் மகழ
அக்கினி அபிஷேகம் எந்தன் ஆவல் தீர்ந்திடும் - ஊற்றப்பட

தேவமைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்
போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே - எண்ணெய்

ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்
ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும் - எண்ணெய்

ஒருமனதோடு கூடி வந்துள்ளோம்
தேவ புத்திரர் என முத்திரை போடும் - எண்ணெய்