Skip to main content

மகிமை உமக்கன்றோ மாட்சிமை உமக்கன்றோ


மகிமை உமக்கன்றோ
மாட்சிமை உமக்கன்றோ
துதியும் புகழும் ஸ்தோத்திரமும்
தூயவர் உமக்கன்றோ
ஆராதனை . ஆராதனை என்
அன்பர் இயேசுவுக்கே

விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்
விடுதலைக் கொடுத்தீர்
இராஜாக்களாக லேவியராக
உமக்கென தெரிந்து கொண்டீர் - ஆராதனை

வழிகாட்டும் தீபம் துணையாளரே
தேற்றும் தெய்வமே
அன்பால் பெலத்தால்
அனல் மூட்டும் ஐயா அபிஷேக நாதரே - ஆராதனை

எப்போதும் இருக்கின்ற
இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜவே
உம் நாமம் வாழ்க உம் அரசு வருக
உம் சித்தம் நிறைவேறுக - ஆராதனை

உம் வல்ல செயல்கள்
மிகவும் பெரிய அதியமன்றோ
உம் தூய வழிகள் - நேர்மையான
சத்திய தீபமன்றோ - ஆராதனை