Skip to main content

ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் யேசு தேவனை என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேன் யான்


ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் யேசு தேவனை
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேன் யான்

உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப் பலியை
யேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன்யான் - ஸ்தோ

பாவக்கறை நீங்க என்னை முற்றிலுமாக
உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே - ஸ்தோ

என்னுடைய நோய்களை உம் காயங்களாலே
என்றைக்குமாய் தீர்த்ததினால் ஸ்தோத்தரிப்பேன் யான் - ஸ்தோ

ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் தேவன்
தினமும் என்னை போஷிப்பதால் ஸ்தோத்தரிப்பேன் யான் - ஸ்தோ

நாளைத் தினம் ஊண் உடைக்காய் என் சிந்தைகளை
கவலையற்ற தாக்கினதால் ஸ்தோத்தரிப்பேன் யான் - ஸ்தோ

சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனே - உமை
சீக்கிரமாய் காண்பதினால் ஸ்தோத்தரிப்பேன் யான் - ஸ்தோ