Skip to main content

யுத்தத்தில் வல்லவர் கர்த்தரே கர்த்தர் என்பது அவர் நாமமாம் - 2


யுத்தத்தில் வல்லவர் கர்த்தரே
கர்த்தர் என்பது அவர் நாமமாம் - 2
அவரே என் தேவன்
அவரை உயர்த்துவேன் - 2

பகைஞனை நொருக்கும் வலக்கரம்
ஜனங்களை விடுவிக்கும் வலக்கரம் - 2
பலத்தினால் சிறந்தது வலக்கரம்
அது என்னை தாங்குதே - 2

பாவியை இரட்சிக்கும் வலக்கரம்
பாதையை செவ்வையாக்கும் வலக்கரம் -2
மகத்துவமான வலக்கரம்
அது என்னை தாங்குதே - 2

நீதியால் நிறைந்த வலக்கரம்
காருண்யம் நிறைந்த வலக்கரம் - 2
பெரியவனாக்கிடும் வலக்கரம்
அது என்னை தாங்குதே - 2