Skip to main content

யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை


யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை
செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை
ஓசன்னா உன்னத தேவனே
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா

கண்மணிபோல் காப்பவரே ஆராதனை ஆராதனை
கழுகுபோல சுமப்பவரே - யோசனையில்

சிலுவையினால் மீட்டவரே
சிறகுகளால் மூடுபவரே - யோசனையில்

வழிநடத்தும் விண்மீனே
ஒளி வீசும் விடிவெள்ளியே - யோசனையில்

தேடி என்னைக் காண்பவரே
தினந்தோறும் தேற்றுபவரே - யோசனையில்

பரிசுத்தரே படைத்தவரே
பாவங்களை மன்னித்தவரே - யோசனையில்