Skip to main content

பகற்காலம் இருக்கு மட்டும் அறுவடை செய்வேனே


பகற்காலம் இருக்கு மட்டும்
அறுவடை செய்வேனே
ஒருவரும் கிரியை செய்யா இராக்காலம் வருமுன்னே
அனுதினம் உழைத்திடுவேன் - நான்

கண்களை ஏறெடுத்து பாருங்கள்
விளைந்த வயல் நிலத்தை காணுங்கள்
அறுப்பின் எஜமானே உம் சித்தமே
இன்று நான் செய்ய ஆயத்தமே - பகற்காலம்

நாடு நகரம் என்று நான் அலைந்திட
காடு மேடு என்று பாய்ந்து சென்றிட
இயேசு தெய்வம் என்று எங்கும் கூறிட
என்னை தந்துவிட்டேன் உம் கைகளில் - பகற்காலம்

எமது சேவை யார் செல்லுவார்
என்று கேட்கும் தேவனின் சத்தம்
என்னை அனுப்பும் என் இயேசுவே
என்னை அர்ப்பணித்தேன் வழி காட்டுமே - பகற்காலம்

இந்தியா இயேசுவை அறிந்து கொள்ள
சாத்தானின் ஆளகை அகன்று ஒழிய
எலியாவின் ஆவியும் அதிகாரமும்
என்னில் வந்திறங்க அருள் தாருமே - பகற்காலம்