Skip to main content

போற்றுவோமே போற்றுவோமே எம் தேவரீரை இவ்வேளையில் நன்றியுடனே


போற்றுவோமே போற்றுவோமே
எம் தேவரீரை இவ்வேளையில் நன்றியுடனே

துங்கன் இயேசுவே தூயா உமக்கே
துதிகள் சாற்றிடுவேன்
மங்காப் புகழும் மகிழ்ந்து போற்றி
எங்கும் துதித்திடுவேன்
கங்குல் அற எங்குமே ஒளி
மங்கிடாமலே தங்கிட வேணும் - போற்றுவோமே

ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே
அணைத்து எடுத்தோனே
ஆழிதன்னிலெம் பாவம் எறிந்த
அன்னை உத்தமனே
அன்றும் இன்றும் என்றும் துதிப்பேன்
மன்னவனையே மண்ணதினிலே - போற்றுவோமே

பாவம் போக்கியே கோபம் மாற்றியே
ரோகம் தொலைத்தோனே
துரோகி என்னையே சுத்திகரித்த
தூய வேத்தனே
தூயா நேயா காயமாற்றியே
கருணா நிதியே பரிகாரியே - போற்றுவோமே

பாரில் என்னையே பிரித்தெடுத்தோனே
தாவி வந்தோனே
அகமதினிலே ஆவி ஈந்திட
அருள் நிறைந்தோனே
தரிசனம் தந்த தேவனே
பரிசுத்தமாய்ப் பாரில் ஜீவிக்க - போற்றுவோமே

பூரணர் ஆகவே பூவில் வாழ்ந்திடக்
கிருபை அளித்தோனே
புகழை விரும்பேன் மகிழ்வேன் தினமே
மகிமை செலுத்திடுவேன்
கோனே தேனே கோதில்லாதோனே
கானம் பாடியே துதித்திடுவேன் - போற்றுவோமே