Skip to main content

பிரசன்னம் தாரும் தேவனே உந்தன் சமூகம் தாருமே


பிரசன்னம் தாரும் தேவனே
உந்தன் சமூகம் தாருமே
இயேசுவே உந்தன் நாமத்தில்
இந்நேரம் நாங்கள் கூடிவந்தோம்

பக்தர்கள் போற்றும் நாதா
பரிசுத்த தேவன் நீரே
கேரூபீன் சேராபீன் துதி பாடிடும்
பரனே நின்பாதம் பணிகின்றோம் - பிர

நீரல்லால் இந்தப் பாரில்
தஞ்சம் வேறாருமில்லை
உந்தனின் சமூகத்தால் இளைப்பாறிட
சந்ததம் உம் அருள் ஈந்திடுமே - பிர

நல் மேய்ப்பர் இயேசு தேவா
துன்பங்கள் நீக்கிடுமே
ஆதி அன்பு என்னில் குன்றிடாமல்
நிலைக்க நல் அருள் தந்திடுமே - பிர

தேவனே உந்தன் சமூகம்
முன் செல்ல வேண்டுகிறேன்
பேரின்பம் எந்நாளும் பொங்கிடவே
உம்மில் மகிழ்ந்து நான் ஆனந்திப்பேன் - பிர

வானத்தில் தோன்றும் நாளில்
உம்மைப் போல் மாறிடவே
ஆவி ஆத்மா தேகம் மாசற்றதாய்
காத்திட கர்த்தரே கெஞ்சுகின்றோம் - பிர