Skip to main content

அக்கினி அபிஷேகம் - தந்து ஆவி பொழிந்திடும்


அக்கினி அபிஷேகம் - தந்து
ஆவி பொழிந்திடும்

அனுபல்லவி
பின் மாரியுடன் பரிசுத்தாவி
பலமாக இறங்கிடவே

சுட்டெரிக்கும் நல் அக்கினி
சுத்திகரிக்க எம்மையும்
குற்றங்குறைகள் மற்றுங் கறைகள்
முற்றிலும் நீக்கிடுமே - எம்மில் - அக்கினி

பற்றினதே வான் அக்கினி
பக்தன் எலியா கூப்பிட
வேண்டுதல் கேட்டு வானந்திறந்து
வல்லமை ஊற்றிடுமே - எம்மில் - அக்கினி

மோசேயுங் கண்ட அக்கினி
முட்செடி மேலே பற்றிட
அற்புத காட்சி தற்பரன் மாட்சி
அண்டிட தந்திடுமே அதை - அக்கினி

நாதாப் அபியூ அக்கினி
நாடி அழிந்தால் நஷ்டமே
அந்நிய தீயை பட்சிக்கும் தேவ
ஆவியே வந்தாளும் - நல்ல - அக்கினி

மேலறை வந்த அக்கினி
சீஷரை அன்று சந்திக்க
பற்பல பாஷை பேசி மகிழ்ந்த
பக்தி வரம் தாரும் - தேவ - அக்கினி

இரண்டு மடங்கு அக்கினி
இந்த கடைசி நாட்களில்
மாம்சமான யாவரின் மேலும்
மாரியுடன் பொழியும் - பின் - அக்கினி