Skip to main content

அழைத்தீரே ஏசுவே அன்போடே என்னை அழைத்தீரே


அழைத்தீரே ஏசுவே
அன்போடே என்னை அழைத்தீரே
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
ஆயத்தமானேன் தேவே

என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
என் உயிர் தந்தேன் மண்ணுயிர்க்கே
என் துயர தொனியோ இதை யார் இன்று கேட்பாரோ
என் காரியமாக யாரை அழைப்பேன்
என்றீரே வந்தோனிதோ - அழைத்தீரே

என்னதான் தீங்கு நான் இழைத்தேன்
என்னை விட்டோடும் என் ஜனமே
எத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோ
என்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்
எப்படி நான் மறப்பேன் - அழைத்தீரே

ஆதி விஸ்வாசம் தங்கிடவே
ஆண்டவர் அன்பு பொங்கிடவே
ஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரே
நல் பூரண தியாகப் பாதை நடந்தே
நன்றியுடன் உழைப்பேன் - அழைத்தீரே

எந்தன் ஜெபத்தை கேட்டிடுமே
ஏழை ஜனத்தை மீட்டிடுமே
எந்தன் பிதா சித்தமே என் போஜனமும் அதுவே
என் பிராணனைக் கூட நேசித்திடாமல்
என்னையும் ஒப்படைத்தேன் - அழைத்தீரே

ஆடம்பரங்கள் மேட்டிமைகள்
ஆசாபசங்கள் பெருகிடுதே
ஆயிரம் ஆழீரமே நரக வழி போகின்றாரே
ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்க
ஆண்டவரே இரங்கும் - அழைத்தீரே