அவர் எந்தன் சங்கீதமானவர் அரணான கோட்டையுமாம்
அரணான கோட்டையுமாம்
ஜீவனின் அதிபதியான அவரை
ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்
துதிகளின் மத்தியினில் வாசம் செய்யும்
தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே
வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும் ( 2)
திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே ( 2) - அவர்
இரண்டு மூன்றுபேர் எந்தன் நாமத்தினால்
இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்
இருப்பேன் என்றவர் நமது தேவன் ( 2)
இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம் ( 2) - அவர்
வானவர் கிறிஸ்தேசு நாமம் அதை
வாழ்நாள் முழுவதும் வாழ்த்திடுவோம்
வருகையில் அவரோடு இணைந்து என்றும் ( 2)
வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம் ( 2) - அவர்