அழைக்கின்றேன் அன்புள்ள ஆண்டவரே
அன்புள்ள ஆண்டவரே
ஆவியில் கலங்கும் போது
இயேசுவே பதில் தாருமே
செங்கடல் எதிர் நோக்கினும்
சேனைகள் பின் தொடர்ந்தும்
மங்காத வாக்குளால்
மோசேயை நடத்தினீரே - அழை
அக்கினி சூளையிலும்
அருகினில் நடந்தது போல்
பக்கத்தில் என் பாதையில்
பரிசுத்தர் கரம் நீட்டுமே - அழை
எலியாவின் தேவன் எங்கே
இடரல்கள் பெருகும் போது
யோர்தான் பிளந்திடவே
இயேசுவே துணை வாருமே - அழை