Skip to main content

அறுப்போ மிகுதி ஆட்கள் குறைவு இயேசுவின் இனிய சத்தம் இன்று நீ கேளாயோ!


அறுப்போ மிகுதி ஆட்கள் குறைவு
இயேசுவின் இனிய சத்தம் இன்று நீ கேளாயோ!

மண்ணுலகில் வந்தார் விண்ணவர் இயேசுவே
நம்மை செய்பவராய் எங்கும் சென்றாரே
பாவம் மன்னித்தார் வியாதி அகற்றினாரே - அறுப்போ

பாவி மனிதனை இறங்கி வா என்கிறார்
பாவிகளின் நண்பர் அவன் இல்லம் சென்றாரே
மாசு அகற்றினார் பிதாவின் சித்தம் செய்தார் - அறுப்போ

ஆத்துமாவின் மதிப்பு உலகிலும் பெரியதே
அதற்கு ஈடாக எதுவும் இல்லை என்றார்
ஆத்துமா நஷ்டமானால் என்ன லாபம் உண்டு - அறுப்போ

அக்கிரமம் பெருகுகின்றதே அன்பு தணிகின்றதே
வேலை ஆட்கள் குறைவு போலியாட்கள் அதிகம்
இராக்காலம் சமீபித்ததே விழிப்புடன் செயல்படுவோம் - அறுப்போ