கடைசி நாட்களிலே கடாட்சிக்கும் தேவனவர்
கடாட்சிக்கும் தேவனவர்
மாமிசமானவர் யாவரின் மேலும்
மாரியைப் பொழிவேன் என்றார் - அருள்
பெருமழையின் இரைச்சல்
பெருந்தொனியாய் முழங்க
பெருகிடும் கிருபை அறுவடைக்கென்றே
அருள்மாரி பொழியும் என்றார் - இன்று - கடைசி
தரிசனம் கண்டிடுவார்
கரிசனை உள்ளோரெல்லாம்
பரிசுத்தவான்கள் கூடிமகிழ்வார்
மாரிதனைக் கண்டபின் - கடைசி
முழங்காலில் நின்றோரெல்லாம்
முடங்கிடுவார் அன்று
முழங்கால் மடங்கும் இயேசுவின் நாமம்
துளங்களை நிரப்பிவிடும் - பணித் - கடைசி
இந்தியாவின் மண்ணிலே
சிந்திய கண்ணீரெல்லாம்
பந்தி பந்தியாய் திருப்பணிக்கென்றே
தந்தோரை எழுப்பிடும் - கடைசி