கன்மலை மேல் வீட்டைக் கட்டுவாயே கர்த்தரின் கற்பனை கைக்கொள்வாயே
கர்த்தரின் கற்பனை கைக்கொள்வாயே
உத்தம சாட்சியாய் நின்றிலங்குவாயே
ஊழியம் செய்குவாயே
நல்ல தீர்க்காயுள் பெருகிடவே
நித்திய ஜீவனும் பெற்றிடவே
பக்தர்கள் பந்தியில் பங்கடைந்திடவே
பரன் தயை புரிவார்
வாழ் நாளெல்லாம் களி கூர்ந்திடவே
வாடாத கிருபை ஈந்திடுமே
கிருபை கிருபை என்றென்று முள்ளதே
கர்த்தனை வாழ்த்திடுவோம்