கல்வாரியில் தொங்குகிறார் உன் பாவம் நீக்க தம்மைத் தந்தார்
உன் பாவம் நீக்க தம்மைத் தந்தார்
உந்தன் சிலுவை ஏற்றனரே
வேர்வையும் இரத்தமுமாக ஆத்துமா வியாகுலம்
அடைந்தாரே இயேசு உனக்காக
தந்தையே உம் சித்தம் என்று இயேசு கதறினாரே - கல்வாரி
சிரசினில் முள்முடி சிவப்பங்கி தரித்தோராய்
நிந்தை யாவும் உனக்காய் ஏற்றாரே
வாரினால் அடித்தார் கோரமான காட்சியாகும் - கல்வாரி
மாசற்ற தேவகே மகிமை யாவும் துறந்தோரமாய்
நீச குருசில் இயேசு தொங்கினார்
பாவத்தை போக்கியே நீதிக்கு பிழைக்கச் செய்தார் - கல்வாரி
கைகளில் கால்களில் இரத்தமும் வடியுதே
உந்தன் நோய்கள் யாவும் ஏற்றாரே
சுகமே அடைவாய் தழும்பாலே குணமடைவாய் - கல்வாரி
எத்தனை துன்பங்கள் என்னையும் மீட்கவே
தியாக பாதை இயேசு காட்டினார்
நித்தமும் அவரின் பின்னே சென்று வாழ்ந்திடுவாய் - கல்வாரி