Skip to main content

கானான் பயணமோ தூரம் - எகிப்தை கடந்து நாம் சென்றிடுவோம்


கானான் பயணமோ தூரம் - எகிப்தை
கடந்து நாம் சென்றிடுவோம்
கர்த்தர் இயேசு உடன் வருவாரே கானானை
களிப்புடன் சேர்ந்திடுவோம்

பார்வோனின் சேனை பின் தொடர்ந்தாலும்
செங்கடல் எதிரே தெரிந்தாலும்
செங்கடலைப் பிளந்து இÞரவேலை நடத்தும்
சேனைகளின் கர்த்தர் உடன் வருவார் - ஒரு
சேதமின்றி நம்மை நடத்திடுவார்

வனாந்திர வழியே நடத்திடுவார்
வாதைகள் ஏதுமின்றி காத்திடுவார்
வானத்தின் மன்னாவால் போஷித்துக் காக்கும்
வல்ல நம் கர்த்தர் உடன் வருவார் - தினம்
வழுவாமல் நம்மை நடத்திடுவார்

மாராவின் தண்ணீரைக் கடந்திடுவோம்
ஏலீமின் நீரூற்றை கண்டிடுவோம்
மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றும்
மகிமையுள்ள கர்த்தர் உடன் வருவார் - அந்த
மகிழ்ச்சியில் நம்மை நடத்திடுவார்