Skip to main content

கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம் இராஜாதி ராஜன் தேவாதி தேவன்


கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்
இராஜாதி ராஜன் தேவாதி தேவன்
இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை
பரிசுத்தவான்கள் சபை நடுவே
தரிசிக்கும் தேவ சமூகத்திலே
அல்லேலூயா அல்லேலூயா
ஆவியில் பாடி மகிழுவோம்
ஆண்டவர் இயேசுவை கொண்டாடுவோம் …………………- கோடா
கிருபாசனத்தண்டை நெருங்குவோம்
திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம்
அல்லேலூயா அல்லேலூயா
கண்டேன் சகாயம் இரக்கமே
கர்த்தர் கிருபை என்றும் உள்ளதே - கோடா
குருவி பறவை வானம்பாடியே
கவலையின்றிப் பறந்து பாடுதே
அல்லேலூயா அல்லேலூயா
அற்புதமான சிருஷ்டிகரே
அந்த விசுவாசம் கற்றறிந்தோம் - கோடா
கவலைப்படாதீர்கள் என்றுரைத்தீர்
காட்டுப் புஷ்பத்தை உடுத்துவித்தீர்
அல்லேலூயா அல்லேலூயா
ஆடை ஆகாரம் தேவை எல்லாம்
ஆன்றன்று தந்தெம்மை ஆதரித்தீர் - கோடா
கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர்
கருத்துடன் பாடி நன்றி கூறுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
தேவகுமாரன் வந்திடும் நாள்
தூயமுகம் கண்டு கெம்பீரிப்போம் - கோடா