கர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்
அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்
கர்த்தரை நான் தேடினேன்
அவர் தம் ஒளியை வீசச் செய்து
எந்தன் பயங்கள் யாவற்றையும்
நீக்கி என்னை விடுவித்தாரே! - கர்த்தரை
சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து
பட்டினியாக இருந்திடினும்
கர்த்தரை தேடும் பிள்ளைகட்கு
குறைவின்றி நன்மைகள் கிடைத்திடுமே - கர்த்தரை
நீதிமானை அணுகிடும் துன்பங்கள்
அநேகமாக இருந்திடினும்
கர்த்தர் நல்லவர் என்பதையே
ருசித்துப் பார்த்திட செய்கின்றார்
அன்பின் இதயம் கர்த்தரை . . . . துதிக்கும்
அல்லேலூயா என்றம் பாடிடுமே!
கர்த்தரின் கரம் நம்மைக் காத்ததினால்
கருத்துடன் இன்றும் ஸ்தோத்தரிப்போம்