கல்வாரி நாதரின் அன்புள்ளம் விளங்க உண்மையாய் தேவா உணர்வுகள் தாரும்
உண்மையாய் தேவா உணர்வுகள் தாரும்
என்னிலே பெலன் தாரும் இயேசுவே அது போதும் - 2
மனிதனின் அன்பது மாயை மாயை தான்
நேசிக்கும் தாயன்பு மாயை மாயை தான்
மரணம் நேரிடில் ஒன்றும் உடன் வராது
உம் அன்பு மட்டும் எப்போதும் எனக்குண்டு - கல்வாரி
உயிரினும் மேலாய் இயேசுவை நேசிக்க
உண்மையாய் அவர் மேல் மெய்யன்பு கூற
என்னைத் தாழ்த்திட என் நிலை உணர
தேவன்பு எனில் வேண்டும் தேவா உடன் தாரும் - கல்வாரி
என் புகழ் ஞானமும் மாயை மாயை தான்
செல்வம் பணங்கள் மாயை மாயை தான்
உம் அன்பு மட்டுமே உலகில் என் செல்வம்
உண்மையாய் காத்திருப்பேன் உன்னத பெலன்தாரும் - கல்வாரி