Skip to main content

கர்த்தாவே நீர் என்றென்றுமாய் உன்னதமானவர் பரிசுத்தரே ஸ்தோத்திரம்


கர்த்தாவே நீர் என்றென்றுமாய் உன்னதமானவர்
பரிசுத்தரே ஸ்தோத்திரம்

கர்த்தாவே உமது செய்கைகளால்
எத்தனை மகிழ்ச்சி ஆக்கினீரே
உமது கரத்தின் கிரியைகளாலே
ஆனந்த சத்தமிடுவேன் - கர்த்தாவே

காண்டா மிருகத்தின் கொம்பைப்போல
எந்தனின் கொம்பையும் உயர்த்துகிறீர்
புது எண்ணையால் என்னை அபிஷேகிப்பீரே
புகழ்ந்து பாடிடுவேன் - கர்த்தாவே

கர்த்தாவே உமது ஆலயத்தில்
நாட்டப்படுவோம் பாக்கியவான்
முதிர்ந்த வயதிலும் கனிகள் தந்தே
கர்த்தரைத் துதித்திடுவார் - கர்த்தாவே