Skip to main content

கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரித்து பாடுவேன்


கர்த்தரை எக்காலமும்
ஸ்தோத்தரித்து பாடுவேன்
அவர் துதி என் வாயிலிருக்கும் - (2)

கர்த்தருக்குள் எந்தன் ஆத்துமா
மேன்மையினால் நிறைந்து நிற்குதே
கனம் மகிமை அவர்க்கு உரியதே - கர்த்தரை

இந்த ஏழை அவரைக் கூப்பிட்டான்
இறங்கி வந்தே பதில் கொடுத்தாரே
இடுக்கண் எல்லாம் நீக்கி விட்டாரே - கர்த்தரை

வாதை துன்பம் வந்த வேளையில்
பாதை காட்டி என்னைத் தேற்றினார்
வலக்கரத்தால் தாங்கிக் கொண்டாரே - கர்த்தரை

என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன்
என் தேவனிடத்திலேயே கெஞ்சினேன்
அவர் எனக்கு செவி கொடுத்தாரே - கர்த்தரை