Skip to main content

காப்பார் உன்னை என்றென்றும் வழுவாமலே


காப்பார் உன்னை
என்றென்றும் வழுவாமலே
இம்மட்டும் காத்தார்
இம்மானுவேலாய்
இன்னமும் காத்திடுவார்

கோழி தன் குஞ்சுகளை
கூவி அழைக்குமாப்போல்
என்னை தம் சிறகுகளால்
அணைத்துக் காத்திடுவாh

கண்ணீர் கவலையுடன்
கஷ்டம் நஷ்டம் வந்தாலும்
கர்த்தரின் நாமத்தினால்
மதிலைத் தாண்டுவேன்

சோதனை சோர்வுகளில்
சோர்ந்திடாமல் காக்கிறார்
நெரிந்த நாணல் முறியாத தேவன்
நிமிர்த்தி உயாத்திடுவார்

இவ்வுலகப் பாடுகள்
என்னை என்ன செய்திடும்
நல்ல போராட்டம் போராடி எந்தன்
ஓட்டத்தை முடித்திடுவேன்

ஆனந்த கீதங்களால்
ஆர்ப்பாத்து மகிழுவேன்
ஆல்லேலூயா பாடுவேன்
அன்பரின் நாமத்தினால்

தேவ சமாதானம் கிருபையே
தேவ சந்தோஷமும் நிறைவாயே
தேவாசீர் வாதங்கள் தங்கிடவே
தேவன் அருள் ஈவாரே

ஆணிக் கடாவின கரமதே
அன்புடன் உன்னை அணைக்கின்றதே
வல்லமை உன்மீதில் பாய்ந்திடவே கர்த்தர்
வலங்கை நீட்டுகின்றார்

இத்தனை ஆண்டுகள் சுமந்தாரே
இன்றைக்கும் உன் இயேசு மாறிடாரே
கலங்காதே திகையாத என் உள்ளமே
கர்த்தர் துணை நிற்கிறார்

தேவ சித்தம் என்றும் செய்திடுவாய்
தேவ குமாரன் உன்னோடிருப்பார்
உன்மேல் தன் கண்வைத்து ஆலோசனை தந்து
உன்னை நடத்திடுவார்