கர்த்தரிலும் தம் வல்லமையிலும் கிருபையாய் யாவரும் பலப்படுவோம்
கிருபையாய் யாவரும் பலப்படுவோம்
தீங்கு நாளிலே சாத்தானை எதிர்த்துநின்று
திராணியுடன் போர் புரிவோம்
சர்வாயுத வர்க்கத்தை எடுத்துக் கொள்வோம்
சாத்தானின் சேனையை முறித்திடுவோம் அவர்
சத்துவ வல்லமையால்
மாமிசம், இரத்தத்துடனுமல்ல
துரைத்தனம், அதிகாரம், அந்தகாரத்தின்
லோகாதிபதியோடும் பொல்லா ஆவியோடும்
போராட்டம் நமக்குண்டு - சர்வா
சத்தியமாம் கச்சைக் கட்டியே
நீதியின் மார்க்கவசம் தரித்தே
சமாதானத்தின் சுவிசேஷ பாதரட்சை
நம் கால்களில் தொடுத்துக் கொள்வோம் - சர்வா
பொல்லாங்க னெய்யும் அம்புகளை
வல்லமையோ டெதிர்க்கும் ஆயுதம்
விசுவாச மென்னும் கேடகம் மேலே
வீரமுடன் பிடித்து நிற்போம் - சர்வா
இரட்சண்யமாம் தலைச்சீராவும்
எக்ஷணமும் அணிந்து கொள்ளுவோம்
தேவ வசனமென்னும் ஆவியின் பட்டயம்
தேவை அதை பிடித்துக் கொள்வோம் - சர்வா
எந்த சமயத்திலும் சகல
வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும்
பரிசுத்தர் கட்காகவே ஆவியினால்
மன உறுதியுடன் ஜெபிப்போம் - சர்வா