கீத சத்தத்தால் கெம்பீரமாகவே கீர்த்தனம் செய்வேன் கர்த்தரை என்றுமே
கீர்த்தனம் செய்வேன் கர்த்தரை என்றுமே
ஆனந்தமாகவே ஆர்ப்பரிப்புடனே - நித்
யானந்தரை நிதமும் பாடுவேன்
வீணையினாலும் தம்புருவினாலும்
கின்னரத்தாலும் என் நாவினாலுமே - 2
சுரமண்டல தொனியும் முழங்க
சீரேசு நாதனை சிறப்பாய் பாடுவேன் - கீத
பத்து நரம்பும் போதாதென்றெண்ணியே
மெத்தவும் மனம் துதியால் நிறைந்தே - 2
உத்தம ஆசீர் உள்ளத்தில் பெற்றிட
உன்னத தேவனை உயர்த்தி துதிப்பேன் - கீத
நானிலந்தன்னில் நல் ஏசுவின் எல்லா
நன்மைகளையும் ஒவ்வொன்றாய் எண்ணியே - 2
நன்றியினாலென் இதயம் பொங்கிட
நடனமாடியே ஆவியில் மகிழ்வேன் - கீத
தேவ ஆவியால் இன்னிசை நாதங்கள்
ஏக சத்தமாய் இசைந்திலங்கிட
தேவ மகிமை மேகமாய் இறங்க
தேவாதி தேவனை புகழ்ந்து போற்றுவேன் - கீத
தேவ சேவைக்காய் மகிமை சாட்சியாய்
ஜீவன் சுகம் என் பெலன் யாவுமீந்தே
மேள வாத்திய மங்கள கீதங்கள்
எக்காள தொனியாய் எங்கும் முழங்கவே - கீத
ஜெயங்கொண்டோனாய் சீயோன் சிகரத்தில்
ஜெய வீரனாம் ஏசுவுடனே நான்
தேவ சுரமண்டலம் கரத்தில் ஏந்தியே
ஜெயத்தின் கீதங்கள் களிப்பாய் பாடுவேன் - கீத