கர்த்தர் நல்லவர் காருண்யம் பெரிது தேவன் நல்லவர் இரக்கங்கள் பெரிது
தேவன் நல்லவர் இரக்கங்கள் பெரிது
இயேசு நல்லவர் அன்பு பெரிது
அவர் ஸ்நேகம் பெரிது தயை பெரிது
இஸ்ரவேலே! உன் பரிசுத்தர் நல்லவர்
இரத்தத்தின் ஐசவரிய சம்பன்னர் நல்லவர்
பஸ்கா பலியாய் வந்தவர் நல்லவர்
ஜீவ மன்னாவாய் போதிப்பவர் நல்லவர் - கர்த்தர்
செங்கடலைப் பிளந்தார் கர்த்தர் நல்லவர்
யோர்தானை குவித்தார் இயேசு நல்லவர்
பார்வோனை அழித்த நம் ராஜா நல்லவர்
பரம கானானுக்கு அழைத்தவர் நல்லவர் - கர்த்தர்
இயேசு நம் ராஜா நல்லவர் நல்லவர்
பசுத்தராஜா நல்லவர் நல்லவர்
ராஜாவின் தயை நமக்கென்றுமுள்ளது
அவர் நேசக்கிருபை மாறாதது - கர்த்தர்