கர்த்தர் என் பெலன் அவரே என் கோட்டை
அவரே என் கோட்டை
ஆபத்து காலத்திலே
அரணான கோட்டையுமாம்
பாடுவேன் கோட்டையும்
பரிசுத்தர் இயேசுவையே
புகழுவேன் அக மகிழுவேன்
பொன் இயேசுவின் நாமத்தையே
கர்த்தரைப் பாடுவேன்
வெற்றியும் சிறந்தாரே
யுத்தத்தில் வல்லவரே
எனக்கவர் நல்லவரே - பாடுவேன்
என் ஆத்தும பெலனானவர்
என்னை அருமையாய் நேசிப்பவர்
கூப்பிட்ட நேரத்திலே
கொடுப்பாரே ஆசீர்வாதம் - பாடுவேன்
என் பாவத்தைப் போக்கினார்
என்னை பரிசுத்தமாக்கினார்
பரிசுத்த ஆவியினால்
புது பெலன் ஈந்தாரே - பாடுவேன்
பலத்தின் மேல் பலமடைவேன்
பரிசுத்தர் வருகை வரை
பறப்பேன் கழுகைப் போல
பரலோகம் போய்ச் சேருவேன் - பாடுவேன்