கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார் கல்லறை விட்டெழுந்தார்
கல்லறை விட்டெழுந்தார்
மகிமையோடு வல்லமையாய்
வெற்றி சிறந்தெழுநதார்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
மரணத்தின் கூர் ஒடித்து
பாதாளத்தை வென்று
சத்துரு சேனை நடுநடுங்க
இரட்சகர் உயிர்த்தெழுந்தார் - ஆ-ஆ -ஆ- அல்
சபையாம் நம் சரீரம்
மகிழ்ந்து களிகூற
மன்னாதி மன்னன் இயேசு கிறிஸ்து
மகிமையாய் எழுந்தார் - ஆ -ஆ -ஆ- அல்
உன்னத ஆவியோடும்
உற்சாக மனதுடனும்
உயிர்த்தெழுந்த உன்னதரை
உயர்த்தி பாடிடுவோம் - ஆ -ஆ -ஆ- அல்