கிறிஸ்து இயேச வருகின்றார் எக்காள சத்தம் வானில் தொனிக்க
எக்காள சத்தம் வானில் தொனிக்க
ஆவலாய் நோக்கும் மீட்கப்பட்டோரை
ஆகாயமீதில் கூட்டிச் சேர்ப்பார்
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்
இயேசு ராஜன் வேகம் வருகிறார்
திருடன் போல வந்திடுவார்
மின்னலைப் போன்ற மா பேரொளியில்
மத்திய வானில் விண் சேனையோடே
சுத்தர்கள் ஒன்றாய் பாடி மகிழ்வோம் - அல்லேலூயா
இமைப்பொழுதில் சுத்தர்களும்
இயேசுவோடொன்றாய் மறைந்தே போவார்
தீவிரமாய் நாம் விழித்திருப்போம்
தேவனுடனே சேர்ந்து களிப்போம் - அல்லேலூயா
நாட்கள் இனியும் சென்றிடாதே
நினையா நேரம் கர்த்தர் வருவார்
விழிப்புடன் நாம் ஜெபித்திருப்போம்
ஆர்ப்பரிப்புடனே அவரை சந்திப்போம் - அல்லேலூயா
மண் சாயல் நீங்கி மாறிடுவோம்
விண் சாயல் நாமும் பெற்று மகிழ்வோம்
ஆழிவற்றோராய் அவரோடென்றும்
ஆனந்தமாக வாழ்ந்து களிப்போம் - அல்லேலூயா