Skip to main content

கர்த்தரின் ஜனமே கைத்தாளமுடனே களிகூர்ந்து கீதம் பாடு


கர்த்தரின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு அல்லேலூயா அல்லேலூயா

பாவத்தின் சுமையகற்றி கொடும்
பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மை கரம் நீட்டிக் காத்த
பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா -2 கர்த்தரின்

நீதியின் பாதையிலே அவர்
நிதம் நம்மை நடத்துகின்றார்
எது வந்த போதும் மாறாத இன்ப
புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா -2 கர்த்தரின்

மறுமையின் வாழ்வினிலே - இயேசு
மன்னவன் பாதத்திலே
பசி தாகமின்றி துதி கானம் பாடி
பரனோடு நிதம் வாழுவோம் அல்லேலூயா -2 கர்த்தரின்