கர்த்தரின் பல நன்மைகளை எண்ணி கருத்துடனே துதித்திடுவேன்
கருத்துடனே துதித்திடுவேன்
களி கூர்ந்து மகிழ்ந்திடுவேன்
நடந்து வந்த வழிகளெல்லாம்
நல்லவரின் கரம் சுமந்ததுவே
ஆறுதல் ஆதரவும் அளித்தாரே
ஆபத்திலே உற்ற துணையவரே
வஞ்சகன் வீசின வலைகளிலே
சிக்கிடாமலே பாதுகாத்தனரே
தாயினும் மேலாக நேசித்தாரே
தாரணியில் என் தஞ்சமும் அவரே
ஜெயமான பாதைகளில் செல்ல
சேனை வீரராய் முன் செல்லுவாரே
கண்ணை என் மீது வைத்திடுவாரே
கற்பிப்பாரே தேவ ஆலோசனைகள்
தூயவரின் அன்பினிலே நாளும் வளர
தூய ஜீவியத்திலும் முன்னேற
தருவாரே தினமும் கிருபைகள்
தயங்காது பாடு சகித்திடவே
மரண இருளில் நடந்தாலும்
பரமன் என்னோடே இருப்பாரே
பரத்திலே உண்டு பல வீடே
சிகரத்தில் நிற்பேன் அவரோடே