கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு அவர் உன்னை ஆதரிப்பார்
அவர் உன்னை ஆதரிப்பார்
நீதிமான் கால்களை
தள்ளாடவே வொட்டார்
கர்த்தர் உன்னை விசாரிப்பார்
கர்த்தர் உன்னை ஆதரிப்பார்
கர்த்தர் உன்னை தாங்கிடுவார்
கர்த்தர் உன்னை தேற்றிடுவார்
கவலையினால் சரீர அளவில்
ஒன்றையும் கூட்டவே முடியாது
நாளை தினத்தைக் குறித்து
கவலைப்பட வேண்டாம்
பெலவீனம் யாவையும் ஏற்றுக்கொண்டே
நோய்கள் யாவையும் சுமந்தாரே
நேசரின் அன்பின் காயங்கள்
உன்னை சகமாக்கும்
உன்னை விசாரிக்கும் தேவன் உண்டு - உன்
கவலையை அவர்மேல் வைத்துவிடு
கண்ணீர் கவலை துடைக்கும் நேசர்
உன்னை தேற்றிடுவார்
உனக்காய் யாவையும் செய்திடுவார் - நீ
அறியா வழியை திறந்திடுவார்
தேவன் திறந்த வாசலை யாரும்
பூட்டவே முடியாதே