Skip to main content

கலங்காதே திகையாதே கர்த்தர் நம்மை விடுவிப்பாரே


கலங்காதே திகையாதே
கர்த்தர் நம்மை விடுவிப்பாரே
கிருபையிலே நாம் வளர்ந்திடுவோமே
கிறிஸ்துவுக்காய் ஜீவிப்போம்
தேவன் பொய் சொல்ல மனிதனல்ல
தேவன் மனம் மாற மனுஷனல்ல
விசுவாசித்தே உரிமைக் கொள்வாய்
விடுதலையை இன்றே

துன்பப் புயல் வீசும் போதும்
துயர் அலைகள் எழும்பும் போதும்
துன்பத்தில் இன்பம் துணைவர் நம் இயேசுவே
துதித்து நாம் பாடிடுவோம் - தேவன்

சத்திய வார்த்தையின் வல்லமையால்
சாத்தானை ஜெயித்திட கிருபை தந்தார்
உன்னதர் இயேசுவின் சேவையிலே நாம்
உண்மையாய் உழைத்திடுவோம் - தேவன்

பரிசுத்த அன்பினில் வளர்ந்திடவே
பரிசுத்த ஆவியை பெற்றிடுவோம்
அக்கினி அபிஷேகம் பெற்றிடவே
அவரையே பற்றிக் கொள்வோம் - தேவன்

தேவாதி தேவன் வருகின்றாரே
வேகமாய் நாமும் சென்றிடவே
வேதத்தை அனுதினம் வாசித்து ஜெபித்து
வேகமாய் பறந்திடுவோம் - தேவன்