Skip to main content

கர்த்தர் அன்பே தூய அன்பே பக்தர்கள் போற்றும் அன்பே


கர்த்தர் அன்பே தூய அன்பே
பக்தர்கள் போற்றும் அன்பே

அனுபல்லவி
இயேசுவின் அன்பு மா பெரிதே
எப்படி பாடுவேனோ - என்

ஆண்டவர் அன்பின் ஆழம் நீளம்
அன்பின் அகலம் உயரம் கண்டேன்
இயேசு பக்தருடன் சேர்ந்துணர்ந்தேன்
இன்றதைப் பாடிடுவேன் - என் - கர்த்தர்

இந்த உலகத் தோற்றம் முன்னே
அந்த மேலான அன்பினிலே
மாசற்றோராக நிறுத்த எம்மை
மாதேவன் தெரிந்து கொண்டார் - என் - கர்த்தர்

என் முழு ஆத்துமா மனதுடனே
என் முழு சக்தி பெலத்துடனே
தேவனிடம் அன்பு கூர்ந்திடவே
தேடியே நாடிடுவேன் - என் - கர்த்தர்

குற்றமில்லாத அன்புடனே
மற்றவரை நான் நேசிக்கவே
கற்பனையில் பிதானம் ஒன்றே
கைக் கொண்டு வாழ்ந்திடுவேன் - அவர் - கர்த்தர்

சத்துருவான மித்திரனை
சோதரன் தோழனாய் நேசித்தீரே
பாதம் பணிந்தும்மை வேண்டுகின்றேன்
பூரண அன்பருள்வீர் - திருப் - கர்த்தர்

ஜீவனைத் தந்த அன்பதுவே
தேவனின் சேவை செய்திடவே
கர்த்தர் வருகையை கண்டிடவே
காத்திருந்தே அடைவேன் - என் - கர்த்தர்

ஆவியின் வரங்கள் ஒன்பதுவே
ஆவியின் நற்கனி ஈந்திடுமே
தேவ அருள் வரம் தேவை அதே
தாகத்தைத் தீர்த்திடுமே - என்றும் - கர்த்தர்