Skip to main content

கர்த்தர் பெரியவர் அவர் நமது தேவனுடைய நகரத்திலே


கர்த்தர் பெரியவர் அவர் நமது
தேவனுடைய நகரத்திலே
தமது பரிசுத்த பர்வதத்திலே
மிகத் துதிக்கப்படத் தக்கவர் - 2

வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம்
வடிப்பமான ஸ்தானமே
சர்வ பூமியின் மகிழ்ச்சியாய் இருக்கிறது
அது மகாராஜாவின் நகரம் - கர்த்தர்

தேவனே உமது ஆலயம் நடுவே
உம் கிருபையை சிந்திக்கிறோம்
பூமியின் கடையாந்திர பரியந்தமும்
உம் புகழ்ச்சியும் விளங்கிடுதே - கர்த்தர்

இந்த இயேசு தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்
நித்திய மகிமையில் சேர்த்திடுவார் - கர்த்தர்