Skip to main content

கிறிஸ்துவின் போர் வீரரே - இயேசு கிறிஸ்துவின் போர் வீரரே


கிறிஸ்துவின் போர் வீரரே - இயேசு
கிறிஸ்துவின் போர் வீரரே
நமது விசுவாசம் உலகை ஜெயிக்கும்
அறிக்கை செய்வீரே

பறிக்கவே முடியாதே - யாரும்
கர்த்தரின் கையிலிருந்து நம்மை
பறிக்கவே முடியாதே (2) - கிறிஸ்துவின்

ஒன்றும் வாய்க்காதே - தீமை
நமக்கு எதிராய் எழும்பும் ஆயுதம்
வாய்க்கவே வாய்க்காதே - கிறிஸ்துவின்

பூட்டவே முடியாதே - கதவை
தேவன் திறந்த வாசலை யாரும்
பூட்டவே முடியாதே - கிறிஸ்துவின்

ஒன்றும் சுமராதே - பழிகள்
கர்த்தரை நம்பிடும் நம்மேல் ஒரு
குற்றமும் சுமராதே - கிறிஸ்துவின்

ஏதும் குறையாதே - நமக்கு
கர்த்தரை எப்போதும் தேடுவோர்க்கொரு
நன்மையும் குறையாதே - கிறிஸ்துவின்