Skip to main content

கானகப் பாதை காடும் மலையும் காரிருளே சூழ்ந்திடினும்


கானகப் பாதை காடும் மலையும்
காரிருளே சூழ்ந்திடினும்
மேக ஸ்தம்பம் அக்கினி தோன்றும்
வேகம் நடந்தே முன் செல்லுவாய்
பயப்படாதே கலங்கிடாதே
பாரில் ஏசு காத்திடுவார்
பரம கானான் விரைந்து சேர்வாய்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவாய்

எகிப்தின் பாவ வாழ்க்கை வெறுத்தே
ஏசுவின் பின்னே நடந்தே
தூய பஸ்கா நீ புசித்தே
தேவ பெலனால் முன் செல்லுவாய் - பயப்படாதே

கடலைப் பாரும் இரண்டாய் பிளக்கும்
கூட்டமாய் சென்றே கடப்பாய்
சத்ரு சேனை மூழ்கி மாளும்
ஜெயம் சிறந்தே முன் செல்லுவாய் - பயப்படாதே

குளிர்ந்த ஏலீம் பன்னீரூற்றும்
காணுவாய் பேரீச்ச மரம்
கன்மலையில் தாகம் தீர்த்து
மன்னா ருசித்தும் முன் சொல்லுவாய் - பயப்படாதே

கசந்த மாரா உன்னைக் கலக்கும்
கஷ்டத்தால் உன் கண் சொரியும்
பின் திரும்பிச் சோர்ந்திடாதே
நன்மை அருள்வார் முன் செல்லுவாய் - பயப்படாதே

கொடுமை யுத்தம் உன்னை மடக்கும்
கோர யோர்தான் வந்தெதிற்கும்
தாங்கும் கர்த்தர் ஓங்கும் கையால்
தூக்கிச் சுமப்பார் முன் செல்லுவாய் - பயப்படாதே

புதுக்கனிகள் கானான் சிறப்பே
பாலும தேனும் ஓடிடுமே
இந்தக் கானான் கால் மிதித்து
சொந்தம் அடை முன் செல்லுவாய் - பயப்படாதே