Skip to main content

கர்த்தர் மேல் நம்பிக்கை வைப்பவனும் கர்த்தரை தஞ்சமாக கொண்டவனும்


கர்த்தர் மேல் நம்பிக்கை வைப்பவனும்
கர்த்தரை தஞ்சமாக கொண்டவனும்
பூரண சமாதானம் சந்தோஷமடைவான்
பூவில் அவனே பாக்கியவான்
பரிசுத்தர்களே பரன் இயேசுவிலே
பாடி மகிழ்ந்தே களி கூருங்கள்
பரலோகத்திலே பலன் ஏராளமே
பாக்கியம் பெற்றவர்கள் நீங்களே

கர்த்தரின் வழிகளில் நடப்போனும்
கர்த்தரில் உத்தமமாய் ஜீவிப்போனும்
அளவில்லாத கிருபைகள் பெறுவான்
அவனே என்றும் பாக்கியவான் - பரிசுத்தர்

உம்மிலே பெலன் கொள்ளும் மனுஷனும்
உள்ளத்தில் செவ்வை வழி கொண்டவனும்
உன்னதர் அன்பினில் பூரணமடைவான்
உண்மையிலவன் பாக்கியவான் - பரிசுத்தர்

சோதனையை தினம் சகிப்போனும்
சோதித்தறிந்த பின்பு உத்தமனும்
வாடிடாத ஜீவ கிரீடத்தை பெறுவான்
வானிலே யவன் பாக்கியவான் - பரிசுத்தர்

அன்பில் பரிசுத்தமுள்ளவனும்
ஆவியில் எளிமையுமானவனும்
சுத்தாங்கம் இருதயத்தில் பெற்றவனெவனும்
சுத்தர் இயேசுவை போலாவான் - பரிசுத்தர்