Skip to main content

கர்த்தரின் நாமம் பலத்த துருகம் நீதிமான் ஓடி சுகமடைவாம் - 2


கர்த்தரின் நாமம் பலத்த துருகம்
நீதிமான் ஓடி சுகமடைவாம் - 2
ஆல்லேலூயா ஆமென் ஆல்லேலூயா
ஆல்லேலூயா அல்லேலூயா (2)

விசுவாசத்தால் நீதி மான் பிழைப்பான்
விசுவாசத்தால் உலகை ஜெயித்திடுவான்
விசுவாசிக்கும் அவன் பதறிடான்
விசுவாசத்தை அவன் காத்துக் கொள்வான் - அல்லே

ஏழுதரம் விழுந்தாலும் எழுந்திடுவான்
ஏழுமடங்கு தீயிலும் பயப்படான்
சோதனையை தினம் சகித்திடுவான்
சோர்ந்து போகாமல் முன்செல்லுவான் - அல்லே

நீதியின் சூரியன் இயேசுவின்
செட்டைகளில் அடைக்கலம் புகுவான்
கொழுத்த கன்று போல் வளர்ந்திடுவான்
கொழுப்பையும் நிணத்தையும் உண்டிடுவாம் - அல்லே

பனையைப் போல் அவன் செழித்திடுவான்
கேதுருவைப் போல் தழைத்திடுவான்
முதிர் வயதிலும் கனி தந்திடுவான்
புஷ்டியும் பசுமையுமாயிருப்பான் - அல்லே