Skip to main content

கரையேறி உமதண்டை நிற்கும் போது ஆண்டவா உதவாமல் பலனற்று வெட்கப்பட்டுப் போவேனோ?


கரையேறி உமதண்டை நிற்கும் போது ஆண்டவா
உதவாமல் பலனற்று வெட்கப்பட்டுப் போவேனோ?
ஆத்மா ஒன்றும் இரட்சிக்காமல்
வெட்கத்தோடே ஆண்டவா
வெறுங்கையனாக உம்மை கண்டு கொள்ளல் ஆகுமா?

ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை வைத்திராமல் சோம்பலாய்க்
காலங்கழித்தோர் அந்நாளில் - துக்கிப்பார் நிர்ப்பந்தராய்

தேவரீர் கைத்தாங்க சற்றும் சாவுக்கஞ்சி கலங்கேன்
ஆயினும் நான் பலன் காண உழைக்காமற் போயினேன்

வாழ்நாள் எல்லாம் வீணாளாகச் சென்று போயிற்றே ஐயோ
மோசம் போனேன் விட்ட நன்மை அழுதாலும் வருமோ

பக்தரே உற்சாகத்தோடு எழும்பிப் பிரகாசிப்பீர்
ஆத்துமாக்கள் இயேசுவண்டை வந்துசேர உழைப்பீர்