கல்வாரியே கல்வாரியே ஒப்பற்ற கல்வாரியே
ஒப்பற்ற கல்வாரியே
கல்மனம் மாற்றிடும்
கனிவுள்ள கல்வாரியே
தேவனின் நித்ய அன்பு
இயேசுவில் தொனிக்கின்றதே
வேதனையின் இரத்தம்
தாரையாய் சிந்துது மானிடனே உனக்காய் - கல்வாரியே
காயங்கள் ஐந்ததுவும் ஐந்து
கண்டத்தை இரட்சிக்கவே
நாயகனை நம்பி ஜீவனுக்குள் செல்ல
தீயனைத் தள்ளிவிடு - கல்வாரியே
பாவத்தை மட்டுமல்ல - உன்
நோயையும் நீக்கிடுமே
பயத்தை நீக்கி, விசுவாசம் கொண்டு
பட்சமாய் அவரண்டை வா - கல்வாரியே
சாத்தானின் தலையையும்
சிலுவையில் நசுக்கினார்
சகலத்தையும் ஜெயித்தவர்
சீக்கிரம் வருகிறார் - கல்வாரியே