கல்வாரி சிலுவை - கரை சேர்க்கும் உன்னை சபையே நீ விழித்தெழும்பு
சபையே நீ விழித்தெழும்பு
இரட்சகர் இயேசு - மன்னிப்பைத் தருவார்
சபையே நீ மனந்திரும்பு ஶி ஓ
விசுவாசம் கொண்டு வேதத்தை
சபையே நீ திடன் கொண்டிடு
உன்னை காக்கும் தேவன் உறங்கார்
சபையே நீ மனந்திருப்பு - ஓ - கல்வாரி
உனக்காய் கொடுத்த வாக்குகள்
சபையே நீ பலம் கொண்டிடு
உனக்காய் யாவும் செய்து முடிப்பார்
சபையே நீ மனந்திரும்பு - ஓ - கல்வாரி
உன் தேவை அறிவார் - கேட்கும் முன் தருவார்
சபையே நீ கவலை கொள்ளாய்
ஊழியம் செய்ய - உன் ஜீவன் தரவே
சபையே நீ மனந்திரும்பு - ஓ - கல்வாரி