கூடாதது ஒன்றுமில்லையே (4) தேவனால் கூடாதது
தேவனால் கூடாதது
கூடாதது ஒன்றுமில்லையே
மனுஷரால் கூடாதது தேவனால் கூடுமே (4)
ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன் சொஸ்தமானானே
சுத்தமாகு என்ற சொன்னாரே
குஷ்டரோகி சொஸ்தமானானே - கூடாதது
லாசருவே வா என்றாரே
மரித்தவன் பிழைத்தானே
எழுந்திரு என்று சொன்னாரே
யவீரு மகள் பிழைத்தாளே - கூடாதது
வஸ்திரத்தை தொட்டாளே
வல்லமை புறப்பட்டதே
எப்பத்தா என்று சொன்னாரே
செவிட்டு ஊமையன் பேசினானே - கூடாதது
கடல் மேல் நடந்தரே
கடும் புயல் அதட்டினாரே
பாடையைத் தொட்டாரே
வாலிபன் பிழைத்தானே - கூடாதது