கர்த்தரின் வருகை நெருங்கிடுதே காத்திருப்போர் மனம் பூரிக்குதே
காத்திருப்போர் மனம் பூரிக்குதே
தேவ எக்காளம் விண் முழங்கிடவே
தூதர்கள் ஆயத்தமே
தேவ கிருபையே அவர் கிருபையே
தேவ குமாரன் வெளிப்படும் நாளிலே
கண்ணிமைப் பொழுதே மாறிடுவோம்
விண்மேகம் மறைந்திடுவோம்
திருடனைப் போல வந்திடுவார்
தீவிரமாய் நாம் விழித்திருப்போம்
சம்பத்தைச் சேர்க்கும் நாளதில் நம்மைச்
சொந்தமாய் வந்தழைப்பார் - தேவ கிருபையே
லோத்தின் மனைவி நினைத்திடுவோம்
லோகத்தின் ஆசைகள் வெறுத்திடுவோம்
லௌகீக பாரம் பெருந்தீனி தள்ளி
தெய்வீகமாய் ஜொலிப்போம் - தேவ கிருபையே
ஆவியின் முத்திரை பெற்றவரே
ஆயத்தமாய்த் தவிக்கின்றனரே
புத்திர சுவீகாரம் அடைந்திடவே
பாத்திரர் ஆவோமே - தேவ கிருபையே
நம் குடியிருப்போ பரத்திலுண்டே
நம் கிறிஸ்தேசுவும் அங்கு உண்டே
வல்லமையான தம் செயலாலே
விண் மகிமை அடைவோம் - தேவ கிருபையே
தாமதம் வேண்டாம் வந்திடுமே
தம் திருவாக்கு நிலைத்திடுமே
இயேசுவே வாரும் ஆவலைத் தீரும்
ஏங்கி அழைக்கிறோமே - தேவ கிருபையே