Skip to main content

கர்த்தரின் கிருபைகளை என்றென்றும் பாடிடுவோம்


கர்த்தரின் கிருபைகளை
என்றென்றும் பாடிடுவோம்
அவர் திருநாமத்தை
ஒருமித்து உயர்த்திடுவோம்

சந்ததம் அவர் புகழ் ஓங்கிடவே
சபையாம் நம்மை அழைத்தாரே
சாற்றிடுவோம் நம் துதியினையே
சர்வ வல்லவராம் இயேசுவுக்கே - கர்த்தரின்

ஜீவன் சுகம் பெலன் யாவும் ஈந்து
சேதமின்றி நம்மைக் காத்தாரே
பூரிப்புடனே நாம் பாடிடுவோட்ம
புதிய பெலத்தால் நிறைந்திடுவோம் - கர்த்தரின்

மரண பள்ளத்தாக்கில் நடந்திடினும்
மாபெரும் தீங்குக்கும்அஞ்சேனே
சோர்ந்து போகாமல் ஜெயம் பெறவே
கர்த்தரின் கிருபை எம்மோடிருக்கும் - கர்த்தரின்

ஜெயகெம்பீரமாய் நாம் பாடிடுவோம்
ஜெயம் முழங்க துதித்திடுவோம்
அல்லேலுயா நாம் ஆர்ப்பரித்தே
அல்லும் பகலும் பாடிடுவோம் - கர்த்தரின்

பொன்னிலும் விலையேறப் பெற்றதாம் நம்
நல் விசவாசத்தைக் காத்துக் கொள்வோம்
மாற்றுவார் சாயலை அந்நாளிலே
மாண்புடனே அவர் மகிமையிலே - கர்த்தரின்