Skip to main content

கர்த்தரையே நம்பிடும் தேவ ஜனமே கலங்காதே ஒரு போதும் வெட்கமடைவதில்லை


கர்த்தரையே நம்பிடும் தேவ ஜனமே
கலங்காதே ஒரு போதும் வெட்கமடைவதில்லை

செங்கடல் கோரமாய் முன்னே நிற்கும்
சேனைகள் பின்னால் தொடர்ந்து வரும்
ஆனாலும் முன்னேறிப் போ என்கிறாரே
ஆவரே ஓர் வழி திறந்திடுவாரே - கர்த்தரையே

கானானின் கடிகள் கொhடியவரே
கானகபாதை கடினமாமே
கடந்து போய் நாம் அதை சுதந்தரிப்போமே
கர்த்தரே நமக்காய் யுத்தம் செய்வாரே - கர்த்தரையே

பாகாலின் சீடர்கள் சவால் விட்டு
பதிலளியா தேவனை வேண்டுகிறார்
எலியாவின் தேவன் இறங்கி வந்தாரே
எரி நெருப்பால் இன்று பதிலளிப்பாரே - கர்த்தரையே

உனக்கெதிராக ஆக்கிடுமாயுதம்
ஒருக்காலும் வாய்க்காமல் மறைந்திடுமே
உன் மேல் ஓர் யுத்தம் எழும்பினாலும்
உன்னை இரட்சிக்கும் தேவன் உண்டு - கர்த்தரையே

யாக்கோபின் கூட்டமே பயப்படாதே
ஈசாக்கின் தேவன் உன் துணையே
அன்னை தன் சேயை மறந்தாலுமே
உன்னை இரட்சிக்கும் தேவன் உண்டு - கர்த்தரையே

சீயோனே உன் பாடுகளெல்லால்
சில காலம் என்று நினைத்தே பாடு
சீக்கிரம் வருவார் சேர்த்திட உன்னை
பாக்கிய மடைவாய் பரலோக வாழ்வில் - கர்த்ததைn