Skip to main content

கர்த்தர் நம் இயேசுவே நல் அஸ்திபாரமாம்


கர்த்தர் நம் இயேசுவே
நல் அஸ்திபாரமாம்
இப்பூவினில் நம் வாழ்வினை
செம்மையாய் கட்டிடுவோம்

இப்புவியின் செல்வாக்குகள்
அழிந்திடுமே மறைந்திடுமே - 2
அழியாத விசுவாசம் அன்புநீதி
இவையாலே கட்டிடுவோம் - 2 - கர்த்தர்

திட்டமில்லா கட்டிடமே
பயனற்றதாய் வீணாகுமே
நம் வாழ்வை தேவனின் சித்தப்படி
இனிதாக கட்டிடுவோம் - கர்த்தர்

சபையானது தேவாலயம்
ஜீவக்கல்லாய் பொருந்திடுவோம்
ராஜாவின் மாளிகை எழும்பிடவே
இசைவாகக் கட்டிடுவோம் - கர்த்தர்