Skip to main content

காலை நேரம் இன்ப ஜெப தியானமே கருணை பொற்பாதம் காத்திருந்தேன்


காலை நேரம் இன்ப ஜெப தியானமே
கருணை பொற்பாதம் காத்திருந்தேன்
அதிகாலையில் அறிவை உணர்த்தி
அன்போடு இயேசு தினம் பேசுவார்

எஜமான் என் இயேசு முகம் தேடுவேன்
என் கண் கர்த்தாவின் கரம் நோக்குமே
எனக்கு ஒத்தாசை அவரால் கிடைக்கும்
என்னை அழைத்தார் அவர் சேவைக்கே - காலை

பலர் தீமை நிந்தை மொழிகள் உன் மேல்
பொய்யாய் சொன்னாலும் களி கூருவாய்
இதுவே உன் பாக்யம் என இயேசு சொன்னார்
இந்த மெய் வாக்கு நிறைவேறுதே - காலை

சிலுவை சுமந்தே அநுதினமே
சோராமல் என் பின் வா என்றாரே
அவரோடு பாடு சகித்தாளுவேனே
ஆண்டாண்டு காலம் ஜெயமாகவே - காலை

பறந்து புறா போல் சிறகடித்தே
பாடிச் சென்றோர் நாள் இளைப்பாறுவேன்
பரலோக வாசல் பரம சீயோனே
பூரித்து என்னை வரவேற்குமே - காலை