Skip to main content

கர்த்தர் துயர் தொனியாய் கதறி முகங் கவிழ்ந்தே


கர்த்தர் துயர் தொனியாய்
கதறி முகங் கவிழ்ந்தே
இருள் சூழ்ந்த தோட்டதிதிலே
இதயம் நொறுங்கி ஜெபித்தார்

மரணத்தின் வியாகுலமோ
மனிதர் துணை இல்லையோ
தேவ தூதன் தேற்றிடவே
தருணம் நெருங்க ஒப்படைத்தார்
துன்ப சுமை சுமந்தார் - கர்த்தர்

துக்கத்தால் தம் சீஷர்களே
தலை சாய்ந்து தூங்கினாரே
தம்மை மூவர் கைவிடவே
தூரமாய் கடந்தே திகிலடைந்தார்
தன்னந் தனிமையிலே - கர்த்தர்

பிதாவே இப்பாத்திரத்தின்
பங்கினை நான் ஏற்றுக் கொண்டேன்
ஆகட்டும் உமது சித்தம்
அது நீங்கிடுமோ என்றுரைத்தார்
ஆ! இரத்த வேர்வையுடன் - கர்த்தர்

திறந்த கெத்சமனேயில்
துணிந்து வந்த பகைஞன்
என்ன துரோகம் செய்திடினும்
எந்தன் சினேகிதனே என்றழைத்தார்
என்ன மா அன்பிதுவே - கர்த்தர்

பரமன் ஜெப சத்தமே
பூங்காவினில் கேட்கிறதே
பெருமூச்சுடன் ஜெபிக்கும்
அவரோடிணைந்தே கண்ணீருடன்
ஆவியிலே ஜெபிப்பேன் - கர்த்தர்

இயேசு தாங்கின துன்பங்கள்
என்னைத் தாண்டியே செல்லாதே
எனக்கும் அதில் பங்குண்டே
சிலுவை மரணப் பாடுகளால்
சீயோனில் சேர்ந்திடுவேன் - கர்த்தர்